தும்பைப்பட்டி சங்கரலிங்கம் கோயிலில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2018 05:11
மேலுார்: மேலுார் அருகே தும்பைப்பட்டியில் சங்கரலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு நவம்பர் 25ம்தேதியன்று புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜைகளுக்கு பின் காலபைரவர், சண்டிகேஸ்வரர், நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பொன்னமராவதி சரவணன் குருக்கள் மற்றும் ரமேஷ் தலைமையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கரநாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தசிலை பிரதிஷ்டை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.