பதிவு செய்த நாள்
27
நவ
2018
10:11
திருப்பூர்: ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு உற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில், 59வது ஆண்டு, மண்டல பூஜை விழா, கடந்த 17 ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை, கணபதி ஹோமம் நடந்தது; மாலை, 6:00 மணிக்கு, சபரி மலை தந்திரி கண்டரு மோகனரு தலைமையில், கொடியேற்றம் நடந்தது.
இன்றும் காலை, 10:00 மணிக்கு நவகலச அபிஷே கம்; மாலை, 6:30 மணிக்கு மஹா விஷ்ணு பூஜை; இரவு, 7:00 மணிக்கு பறையெடுப்பு நடக்கிறது. வரும் டிச., 1ம் தேதி, காலை, 8:45 மணிக்கு, சுவாமி ஐயப்பன், திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு, ஆறாட்டுக்கு புறப்படுகிறார். அன்று காலை, 11:00 மணிக்கு, பெருமாள் கோவில் குளத்தில், ஐயப்பன் ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து, மதியம், 1:00 மணிக்கு, யூனியன் மில் ரோட்டில் உள்ள, பன்னிரெண்டார் திருமண மண்டபத்தில், அன்னதானம் நடைபெறும். மாலை, 6:30 மணிக்கு, ஈஸ்வரன் கோவிலிலிருந்து, செண்டை மேளம் முழங்க, ஐயப்ப சுவாமி ரத யாத்திரை ஊர்வலம் புறப்பட்டு, இரவு, 9:00 மணிக்கு கோவில் வந்தடைகிறது.ஆறாட்டு உற்சவ விழாவை முன்னிட்டு, தினமும் மாலை, 6:30 மணிக்கு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஸ்ரீ ஐயப்ப பக்த ஜன சங்கம், ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், விழா ஏற்பாடுகளை செய்துள்ளன.