பதிவு செய்த நாள்
29
நவ
2018
12:11
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேருக்கு, 4.77 லட்சம் ரூபாய் செலவில், இரும்பு சக்கரங்கள் நேற்று பொருத்தப்பட்டன.ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், ஆண்டுக்கு இரு முறை தேர் பவனி நடைபெறும். இதற்கு பயன்படுத்தப் படும் தேரின் சக்கரம் சேதமடைந்திருந்தது.இதனால், தேரின், நான்கு மரச்சக்கரங்களையும் மாற்றி, இரும்பு சக்கரம் அமைக்க திட்டமிடப்பட்டது.
திருச்சி, பெல் நிறுவனத்தில், இரும்பு சக்கரங்கள் தயாரிக்கப் பட்டன. இவை நேற்று (நவம்., 28ல்), ஸ்ரீபெரும்புதூருக்கு கொண்டு வரப்பட்டன.இதையடுத்து, தேரின் சக்கரங்களை இணைக்கும், இரண்டு மைய கட்டைகள் அகற்றப்பட்டு, அதற்கு பதில் இருப்பிலான மைய ராடுகள் மற்றும் நான்கு இரும்பு சக்கரங்கள், நேற்று (நவம்., 28ல்) பொருத்தப்பட்டன.