பதிவு செய்த நாள்
29
நவ
2018
01:11
வீரபாண்டி: சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், கடந்த மாதம் சஷ்டியன்று, சூரசம்ஹாரம் நடந்தது. சூரனை வதம் செய்த பின் வந்த முதல் சஷ்டியான நேற்று (நவம்., 28ல்), மூலவர் கந்தசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜை நடந்தது.
குழந்தை வரம் வேண்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், கந்தசஷ்டி கவசத்தை, 16 முறை பாராயணம் செய்து, விரதத்தை தொடங்கினர். மாலை, மயில் வாகனத்தில், வள்ளி,
தெய்வானையுடன், சுவாமியை, பக்தர்கள் சுமந்து, கோவிலை சுற்றி வலம் வந்தனர். அதேபோல், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. வள்ளி, தெய்வானையுடன், உற்சவர் சுப்ரமணியரை, பக்தர்கள், தேரில் எழுந்தருளச்செய்து, கோவிலை சுற்றி வலம் வந்தனர்.