Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி மாரியம்மன் கோவிலில் ஐயப்ப ... பைரவர் அஷ்டமி விழா செம்பாக்கத்தில் கோலாகலம் பைரவர் அஷ்டமி விழா செம்பாக்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மபுரி காலபைரவர் ஜெயந்தி: தட்சணகாசி கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2018
01:12

தர்மபுரி: காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், நேற்று (நவம்., 30ல்)சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த, பிரசித்தி பெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு, பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் (நவம்., 29ல்) காலை, 7:00 மணிக்கு காப்பு கட்டுதல், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தியுடன் கொடிறேற்றம் நடந்தது.

நேற்று (நவம்., 30ல்) காலை, 5:00 மணிக்கு விஷ்பரூப தரிசனம், கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், யாகதச ருத்ர ஹோமம், கோ பூஜை, அஷ்வ பூஜை, 64 வகையான அபிஷேகம் ஆகியவற்றை, 18 குருக்கள் கொண்டு, ஒரு லட்சத்து எட்டு அர்ச்சனை செய்து, பைரவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. இரவு, 10:30 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல், 108 கிலோ மிளகு கொண்டு, சத்ரு சம்ஹார யாகம், பைரவயாகம், குருதி பூஜை நடந்தது. இன்று (டிசம்.,1ல்)காலை, 2:00 மணிக்கு நாய் வாகனத்தில், பைரவர் ஊர்வலம் நடந்தது. 3:00 மணிக்கு, 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு கொடியிறக்கம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

* கிருஷ்ணகிரி அடுத்த, கல்லுகுறிக்கி பெரிய ஏரி மேற்குகோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், பைரவர் ஜெயந்தி மற்றும் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ பூஜை, பைரவர் ஹோமம் நடந்தது. 10:00 மணிக்கு, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். மூலவருக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டு மேல் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், காலபைரவர் மற்றும் திரிபுர பைரவி அம்மையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவிலை சுற்றி தேரில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar