பதிவு செய்த நாள்
01
டிச
2018
01:12
திருப்போரூர் : செம்பாக்கம் கால பைரவர் கோவிலில், அஷ்டமி விழா சிறப்பு வேள்விகளுடன் நேற்று நிறைவடைந்தது.திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில், 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி வழிபாட்டுடன், மாதம் இரு முறை அஷ்டமி அபிஷேகம் விமர்சையாக நடக்கிறது.மேலும், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், கிருஷ்ண பட்ஷத்தில் அஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது.அந்த வகையில், இந்தாண்டு பைரவர் விழா, 28ம் தேதி துவங்கியது. துவக்க நாளில் கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை மற்றும் மகாலட்சுமி வழிபாடு நடந்தது.நேற்று முன்தினம், சிவ குடும்ப சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. விழாவை ஒட்டி, புலவர் சுப்பு பெருமாளின் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் வர்ண ராகங்கள் பக்தி இசைக்குழுவினரின் கச்சேரியும் நடந்தது.சிறப்பு வேள்விகளுடன் விழா நேற்று நிறைவடைந்தது. அதுபோல, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் உள்ள பைரவருக்கும் நேற்று அபிஷேகம் நடந்தது.