செஞ்சி: செஞ்சி, எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில் ஐயப்ப சுவாமி பூஜைநடந்தது.சபரிமலை யாத்திரை குழு சார்பில் உலக நன்மை வேண்டி ஐயப்ப பூஜை மற்றும் மகா சக்தி பூஜை நடந்தது. அதனையொட்டி மாலை 4:00 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு ஐயப்ப பூஜை துவங்கியது. கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் ஏழுமலை பூஜையை துவக்கி வைத்தார். குருசாமி குருமூர்த்தி பூஜைகளை செய்தார். மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது.விழாவில் நரசிம்மன், செல்வாநந்தம், ராஜேந்திரன், மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க., ஒன்றிய செயலர் விஜயகுமார், முன்னாள் தலைவர் ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.