பதிவு செய்த நாள்
04
டிச
2018
02:12
புதுடில்லி: சபரிமலை விவகாரம் தொடர்பாக, கேரள உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும், உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, கேரள மாநில அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனு மதிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி, ஏற்கனவே மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை, ஜன., 22ல் விசாரணைக்கு ஏற்பதாக, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சபரிமலை விவகாரம் தொடர்பாக, கேரள உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மாநில அரசின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.