பதிவு செய்த நாள்
07
டிச
2018
12:12
அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, சபரிமலைக்கு கூடுதலாக, இரண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சபரிமலைக்கு, சென்னை, ஐதராபாத் மற்றும் வட மாநிலங்களில் இருந்து, 26 சிறப்பு ரயில் களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இந்நிலையில், சபரிமலை செல்ல, பக்தர்கள் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, மேலும் இரண்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொச்சுவேலி - ஐதராபாத் இடையே இயங்கும் சிறப்பு ரயில், ஜன., 14, 21 மற்றும் 28 ஆகிய நாட்களில் இயக்கப்படும். காலை, 7:45 க்கு கொச்சுவேலியில் புறப்படும் ரயில், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஸ்டேஷன்களில் நின்று, சித்தூர் வழியாக மறுநாள் அதிகாலை, 2:15 க்கு திருப்பதி செல்லும். அன்று மதியம், 2:00 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.எர்ணாகுளம் - ஐதராபாத் இடையேயான மற்றொரு சிறப்பு ரயில், ஜன., 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதி இயக்கப்படுகிறது. இரவு, 9:30க்கு புறப்படும் ரயில், மறு நாள் இரவு, 9:25 க்கு ஐதராபாத் சென்றடையும்.