பதிவு செய்த நாள்
07
டிச
2018
12:12
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெரும்புதூரில், 2016ல், தமிழக தொல்லியல் துறை, அகழாய்வு செய்தது. அதில், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன் படுத்திய கல் கருவிகள், மண் பாண்டங்கள், சங்ககால மக்கள் பயன்படுத்திய தொல்பொருட் கள், உறைகிணறு உள்ளிட்டவை கிடைத்தன.
இதன்பின், இந்த ஆண்டு மே, 25 முதல், செப்., 30 வரை, தமிழக தொல்லியல் துறை, அகழாய்வு நடத்தியது. அதில், 1,200க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.இது குறித்து, தொல்லியல் துறை கமிஷனர் உதயசந்திரன் கூறியதாவது:
பட்டறை பெரும்புதூரில் நடத்தப்பட்ட அகழாய்வு முடிந்துள்ளது. அதில், 2,000 ஆண்டுகளுக்கு முன், செங்கல்லால் கட்டப்பட்ட, 15 அடி ஆழமுள்ள கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும், உறைகிணறு, மண்பாண்டங்கள், ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சோழர் கால நாணயம், கூம்பு வடிவ ஜாடி உள்ளிட்ட, தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.