பதிவு செய்த நாள்
09
டிச
2018
12:12
குமாரபாளையம்: குமாரபாளையம், பாண்டுரங்கர் கோவிலில், ஏகாதசி விழாவிற்கு, தூய்மைப் பணி துவங்கியுள்ளது. வைகுண்ட ஏகாதசி விழா, வரும், 18ல் நடக்கிறது. இதை முன்னிட்டு, குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் சுத்தம் செய்யும் பணி மற்றும் வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது. கோவிலின் முன்புற பகுதியில் பித்தளை உலோகத்திலான எழுத்துகளால் கோவிலின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது. கருட பகவான், ஆஞ்சநேயர், சங்கு, சக்கரம், திருநாமம் ஆகியவை பல வண்ணங்களில் வரையப்பட்டு, பண்டரிபுரமே வைகுண்டம், பாண்டுரங்கனே பரப்பிரம்பம் என, எழுதப்பட்டுள்ளது. கோவில் வளாகம் முழுவதும், மெருகேற்றப்படுகிறது. நேற்று, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.