பதிவு செய்த நாள்
10
டிச
2018
12:12
மகாண்யம்: கல்யாண சீனிவாச பெருமாள் கோவிலில், வனபோஜன விழா நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மகாண்யம் பகுதியில், கல்யாண சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.கிருஷ்ணர், சிறு வயதில், சிறுவர்களுடன் வனத்திற்கு சென்று, உணவு சாப்பிட்டதை நினைவு கூறும் வகையில், இந்த கோவிலில் நேற்று, வன போஜன உற்சவ விழா நடந்தது.இதற்காக, கோவிலில் இருந்து கிருஷ்ணர், அருகே உள்ள காட்டிற்கு எழுந்தருளினார். கிராம மக்கள், சிறுவர்கள் ஆரவார மாக உடன் சென்றனர்.வன பகுதிக்கு சென்றதும், பானையடித்தல், கண்ணாமூச்சி உள்ளிட்ட வற்றை சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.