விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை துவங்கியது.விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில், கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டினரால் புதுப்பிக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேக விழா வரும் 12ம் தேதி புதன்கிழமை காலை 9:00 முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை பூஜை நேற்று காலை துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை தீபாராதனை நடைபெற்றது. புதிய விக்கிரகங்கள் கரிகோலம் வந்து முதல்கால யாக சாலை பூஜை துவங்கியது.வரும் புதன் கிழமை காலைநான்கு கால யாகசாலை பூஜையுடன் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.