நாகர்கோவில் கோட்டார் குறுந்தெருவில் குலசேகரநாதர் கோயில் உள்ளது. இங்கே குலசேகர அம்மனுடன் சுவாமி கருவறையில் உள்ளார். இவர்களை நேராக நின்று பார்க்க முடியாது. குறுக்கு கம்பிகள் இட்ட ஜன்னல் வழியே தரிசிக்க முடியும். உக்கிரமாக இருக்கும் தெய்வங்களின் ஆற்றலை நம்மால் தாங்க முடியாது என்பதால் இம்முறையில் வழிபடுவர். கும்பகோணம் அருகிலுள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் கடல்நுரையால் ஆன சுவேத விநாயகர் சிலை அபூர்வமானது. திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் சிவசைலநாதர் கோயில் சிவலிங்கத்திற்கு ஜடாமுடி உண்டு. இக்கோயில்களில் சுவாமியை பலகணி வழியாக தரிசிக்கலாம்.