திருக்கோவிலூர் பெருமாள் கோவில்களில் பகல் பத்து உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2018 02:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ பகல் பத்து உற்சவத் தின் மூன்றாம் நாளான நேற்று (டிசம்., 10ல்) பெருமாள் ஆண்டாள் அலங்காரத்தில் எழுந்தருளி னார்.நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ வைகுண்ட ஏகாதசியின் முதல் பத்து நாட்கள் கொண்டாடப்படும் பகல் பத்து உற்சவம் கடந்த 8ம் தேதி துவங்கியது.விழாவின் மூன்றாம் நாளான நேற்று (டிசம்., 10ல்) காலை 10:00 மணிக்கு‚ ஆண்டாள்‚ பெருமாள் சிறப்பு திருமஞ்சனம்‚ பகல்2:00 மணிக்கு‚ ஆண்டாள் திருப்பாவை‚ நாச்சியார் திருவாய்மொழியும்‚ மாலை 4:00 மணிக்கு தேகளீச பெருமாள், ஆண்டாள் திருக்கோலத்தில் ஆலய பிரதட்சனமாக வலம் வந்து பெருமாள் சன்னதியில் எழுந்தருளினார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பகல் பத்து உற்சவத்தின் நிறைவாக 17ம் தேதி இரவு பெருமாள் மோகனாவதாரத்தில் சாத்துபடியும்‚ திருமங்கையாழ்வார் மோட்ச வைபவம் நடக்கிறது. மறுநாள் 18ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சொற்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் அன்று முதல் ராபத்து உற்சவம் துவங்குகிறது.விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீநிவாச ராமானு ஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் கடந்த 8 ம் தேதி துவங்கியது. வரும் 17 ம் தேதி வரை நடக்கும் பகல் பத்து உற்சவத்தில் பெருமாள் தாயார் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு மண்டபத்தில் எழுந்தருள செய்கின்றனர். நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து வரும் 17 ம் தேதி மோகினி அலங்காரமும், அதனைத் தொடர்ந்து வைகுண்ட ஏகாதசிக்கு பின் பத்து நாட்களுக்கு ராபத்து உற்சவம் நடத்தப்படுகிறது.