சாணார்பட்டி: சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டியில் ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தேவதானுஞ்சை, சங்கல்பம், வாஸ்துசாந்தி, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை வேதபாராயணம், சதுர்வாதிர பூஜை, வேதிகார்ச்சனை ேஹாமம், நாடிசந்தானம், யாத்ராதானம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதையடுத்து முக்கிய தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தம் கொண்டு வரப்பட்டு விமானம் மற்றும் மூலஸ்தான பீடசக்தியில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை முதல் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.