புதுச்சேரி:முருங்கப்பாக்கம் ராமானுஜர் பஜனை மடத்தில் மார்கழி மகோற்சவம் துவங்கியது. புதுச்சேரி முருங்கப்பாக்கம் ராமாநுஜ பஜனை மடத்தில், மார்கழி மாதத்தில் 30 நாட்களும் ஆண்டாள் பாசுரத்துடன் பஜனை ஊர்வலம் மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். அந்தவகையில் மார்கழி மாத பிறப்பையொட்டி, நேற்று (டிசம்., 16ல்) காலை 6:00 மணிக்கு, பஜனை ஊர்வலம் நடந்தது. 18 ம் தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் 22ம் தேதி, 29ம் தேதி, ஜனவரி 5ம் தேதி சிறப்பு பஜனை ஊர்வலம் நடக்கிறது. 11ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. 14ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.