வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை (டிசம்., 18ல்)சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2018 01:12
வில்லியனூர்:வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை காலை சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் நடக்கிறது.வில்லியனூரில் உள்ள பழமை வாய்ந்த தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதாசி சொர்க்க வாசல் திறப்பு உற்சவ விழாவைமுன்னிட்டு, இன்று (டிசம்., 17ல்) இரவு 8:00 முதல் 9:00 மணி வரையில் தசமி திருமஞ்சனமும், நாளை (18 ம் தேதி) காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு உற்சவ பெருமாள் காட்சியளிக்கிறார். அதனை தொடர்ந்து நெய்வேத்தியமும், தீர்த்த பிரசாதமும் வழங்கப்படுகிறது. கூடப்பாக்கம் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலிலும் காலை 5:00 மணிக்கு மேல் சொர்ககவாசல் திறப்பு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உற்சவதாரர்கள் மற்றும் கோவில் சிறப்பு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.