Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் லட்டு ... ஈரோடு பன்னிரு திருமுறை முற்றோதுதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் பாலாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2018
03:12

சென்னிமலை: சென்னிமலை டவுன் ஐயப்பா நகர், ஐயப்ப சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், மார்கழி முதல் ஞாயிற்றுக் கிழமையில், பால் அபிஷேக விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த வருடம் 10ம் ஆண்டு பாலாபிஷேக விழா நேற்று (டிசம்., 16ல்) நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஐயப்ப சுவாமி கோவிலில் இருந்து, பால் குடங்களுடன் புறப்பட்டு, மேள, தாளங்களுடன் சென்னிமலை, நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தனர். பின், மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு, மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அங்கிருந்து, ஐயப்பா நகரில் உள்ள, கோவிலுக்கு சென்றனர். அங்கு ஐயப்ப சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஸ்ரீ ஐயப்பா பக்த ஜனசபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

* கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐயப்பன் கோவிலில், 35ம் ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 15ல்) காலை பெரிய நாயகியம்மன் சமேத கைலாசநாதர் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. மாலை கிருபானந்த வாரியாரின் சிஷ்யை, உபன்யாசசிம்மம் லதா கதிர்வேல் தலைமையில், சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, ஐயப்பன் திருவீதி உலா வாணவேடிக்கையுடன் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar