ஏகாதசி விரத நோக்கம் பிறப்பற்ற நிலையான மோட்சம் பெறுவதாகும். இதற்காகவே வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கின்றனர். இதை ’பரமபத வாசல்’ என்பர். ’பரம’ என்றால்’ கடவுள்’. பதம் என்றால் ’திருவடி’. கடவுளின் திருவடியை அடைவதற்காக திறக்கப்படுவதே பரமபதவாசல். மோட்சம் வேண்டியிருப்பதால் ஏகாதசியை ’நித்திய ஏகாதசி’ என்பர். செல்வ வளத்துடன் வாழவும் இதை மேற்கொள்வதால் ’காமிக ஏகாதசி’ என்றும் சொல்வர். ’காமிகம்’ என்றால் ’விருப்பம்’.