தேவாரம் :மகாசிவராத்திரியை முன்னிட்டு கிராம கோயில்கள் பளிச்சிடுகின்றன. மகாசிவராத்திரி இன்று முதல் புதன் வரை கொண்டாடப்படவுள்ளது. மூதாதையரை குல தெய்வமாக வழிபடும் வழக்கம் தொன்று தொட்ட உள்ளது. மகாசிவராத்திரியன்று பாரிவேட்டை கட்டி மறுநாள் கிடா வெட்டி வழிபாடு நடத்தப்படும். இதற்காக மக்கள் தங்கள் கோயில்களை சுத்தப்படுத்துவதில் மும்முரமாக உள்ளனர். ஆண்டு முழுவதும் கவனிப்பாறின்றி உள்ள இந்த கோயில்கள் மகாசிவராத்திரியை முன்னிட்டு வர்ணம் பூசப்படுகின்றன.