தாடிக்கொம்பு :தாடிக்கொம்பு அருகே பிறகரை புனித பெரிய அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா நடந்துவருகிறது. பிப்., 17 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களின், இரவு சப்பர பவனி நடந்தது. அகரம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்திவேல்,தாடிக்கொம்பு பேரூராட்சி துணைத் தலைவர் சுப்பிரமணி, கவுன்சிலர் திருமலைசாமி, தாடிக்கொம்பு அ.தி.மு.க., நகர செயலாளர் முத்துராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். சப்பரங்கள் தாடிக்கொம்பு குழந்தை இயேசு ஆலயம் வந்து மீண்டும், பிறகரை சென்றடைந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரபவனி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாதிரியார் எர்னெஸ்ட்அந்தோணிசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.