பதிவு செய்த நாள்
20
பிப்
2012
11:02
ஆத்தூர்:ஆத்தூர் மகா சிவராத்திரி விழாவையொட்டி, பெரியநாயகி அம்மன் கோவிலில், இன்று முதல் 26ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இதையொட்டி, 108 மூலிகையில் சவுமிய பிரத்யங்கரா ஹோமம், அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.வரும் 21ம் தேதி, கொல்லன் பட்டறை அருகில் உள்ள வசிஷ்ட நதியில் அம்மன் உருவம் செய்து, குறை கூடையுடன் ஸ்ரீபெரிய நாயகி அம்மன், வீரபத்திர சுவாமி திருவீதி உலா நடக்கிறது. பின், 22ம் தேதி, சமயபுரம் மாரியம்மன் அலங்காரமும், 23ம் தேதி, மீனாட்சி அம்மன் அலங்காரமும், 24ம் தேதி, துர்க்கை அம்மன் அலங்காரமும், 25ம் தேதி, சிவசக்தி அலங்காரமும் செய்யப்படுகிறது.வரும் 26ம் தேதி, பெரிய நாயகி அம்மனுக்கு, மஞ்சள் நீராட்டு விழாவுடன், அன்னதானம் வழங்கப்படுகிறது.