கோவையில் ஆஸ்திக சமாஜம் சார்பில், நாளை (டிசம்., 22ல்) மகா மந்திர அகண்ட நாமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2018 01:12
கோவை:ஆஸ்திக சமாஜம் சார்பில், மகா மந்திர அகண்ட நாமம் ஆன்மிக நிகழ்ச்சி, இடையர் பாளையத்தில் நாளை (டிசம்., 22ல்) நடக்கிறது.
ஆஸ்திக சமாஜம் சார்பில், மகா மந்திர அகண்ட நாம கீர்த்தனம் கூட்டு பிராத்தனை ஆன்மிக நிகழ்ச்சி, இடையர்பாளையம் வி.ஆர்.ஜி. மஹாலில் நாளை (டிசம்., 22ல்) நடக்கிறது.
காலை, 5:00 மணிக்கு மஹா கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு மகா மந்திர நாம கீர்த்தனம் கூட்டு பிராத்தனையும், 7:00 மணிக்கு விஷ்ணு சஹஸ்ரநாமமும் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு சீர்காழி ஸ்ரீ சட்டநாத பாகவதரின் நாம சங்கீர்த்தனம் நடக்கவுள்ளது.
அதனை தொடர்ந்து மஹா தீபாராதனை மற்றும் மங்கள ஆரத்தி நடக்கிறது. விவரங்களுக்கு, 96006 74420 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.