Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவபாஷாண கோயிலில் வசதிகளுக்காக ... வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம் வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

24 டிச
2018
12:12

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் எழுந்தருளியதும், பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆருத்ரா தரிசனம் யொட்டி நேற்று ராமேஸ்வரம் கோயிலில் நள்ளிரவு 2:00 மணிக்கு நடை திறந்து. நள்ளிரவு 2:30 முதல் 3:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. இதனைதொடர்ந்து கால பூஜை நடந்ததும், கோயிலில் இருந்து பல்லக்கில் மாணிக்கவாசகர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து, நடராஜர்  சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளினார். பின் நடராஜர் சுவாமிக்கு பால், தேன், பஞ்சாமிர்தம் அபிேஷகம் நடந்தது. இதன் பின் மாணிக்கவாசகர் திருவாசகம் பாடல் பாடும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் பாடினர். இதனையடுத்து சன்னதி முன்பு இருந்த திரை விலகியதும் தங்க கவச அலங்காரத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளித்தார். பின் நடராஜருக்கு மகா தீபாரா தனை நடந்தது.

கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் கக்காரின், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன், உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், தொண்டி ஏகாம்பரேஸ்வரர், நம்புதாளை நம்புஈஸ்வரர் ஆகிய கோயில்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பரமக்குடி: பரமக்குடி மற்றும் நயினார்கோவில் உள்ளிட்ட சிவ ஸ்தலங்களில்  ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடந்தது.  பரமக்குடி சந்திரசேகர சுவாமி கோயிலில் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன் மாணிக்கவாசகர் காப்பு கட்டுடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் மாணிக்கவாசகர் ஆடி வீதி வலம் வந்து திருவெம்பாவை வாசிக்கப்பட்டன.  நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு மேல் உற்ஸவர் நடராஜ மூர்த்தி பச்சை சாத்தி  புறப்பாடு நடந்தது. அப்போது கொடிமர மண்டபத்தில் ஆனந்த தாண்டவம் ஆடும்  நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.  தொடர்ந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு  சிறப்பு ேஹாமங்கள் நிறைவடைந்து, காலை 4:00 மணி தொடங்கி, பால், பன்னீர், இளநீர், பஞ்சமிர்தம், பழச்சாறு, சந்தனம், விபூதி உள்ளிட்டவற்றால் மகாஅபிேஷகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அருணோதயத்தில் காலை 5:10 மணிக்கு  ஆருத்ரா தரிசனமும், தீபாராதனைக்குப் பிறகு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. காலை 10:00 மணிக்கு மாணிக்கவாசகர், நடராஜமூர்த்தி புஷ்பகவிமானத்தில் வீதியுலா வந்தனர். மாலை 6:00 மணி தொடங்கி, பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

*இதே போல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நேற்று அதிகாலை உற்ஸ வருக்கு மகாஅபிேஷகம்  நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்தனர்.

*நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில், தினமும் மாணிக்கவாசகர் கோயிலை வலம் வந்து, எட்டுத்திசைகளிலும் திருவெம்பாவை பாடப்பெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை மகாஅபிேஷகம் நடந்தது.


*எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஹர, ஹர, சிவ, சிவ கோஷத்துடன் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar