Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சென்னை சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் சென்னை சிவன் கோவில்களில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 டிச
2018
12:12

திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, ஆருத்ரா அபிஷேகத்தை முன்னிட்டு, 33 வகையான அபிஷேகங்கள், நடராஜ பெருமானுக்கு நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின் துணை கோவிலான, வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடு பகுதியில் உள்ளது.

இக்கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபை என்பதால், ரத்தினசபை என்றழைக்கப்படுகிறது.இக்கோவிலில், மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதே, ஆருத்ரா தரிசனம் என, அழைக்கப்படுகிறது.அந்த வகையில், நேற்று முன்தினம், ஆருத்ரா அபிஷேகம் விழா ஓட்டி மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு, 8:50 மணிக்கு, ரத்தின சபாபதிப் பெருமான் கோவில் வளாகம் பின்புறத்தில் உள்ள, ஸ்தல விருட்சத்தின் கீழ், புதிதாக நிர்மாணித்துள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்தில் உற்சவர் வடாரண்யேஸ்வரர், வண்டார் குழலியம்மனுடன் எழுந்தருளினார். அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், இரவு, 9:00 மணிக்கு விபூதி அபிஷேகத்துடன், ஆருத்ரா அபிஷேக விழா துவங்கியது.பின், நடராஜருக்கு, கதம்பத் துாள், நெல்லிப் பொடி, வில்வப் பொடி, சாத்துக்குடி, பலா, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என, மொத்தம், 33 வகையான அபிஷேகங்கள், நேற்று அதிகாலை, 3:00 மணி வரை நடந்தது.அதிகாலை, 4:30 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு, சர்வ அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான் ஆலமர பிரகாரத்தை வலம் வந்து, கோபுர தரிசனத்திற்கு வந்த பின், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.நேற்று பிற்பகல், 1:30 மணியளவில், அணுக்க தரிசனம் நடந்தது. ஆருத்ரா அபிஷேகத்தை பார்ப்பதற்கு, துாரத்தில் அமர்ந்திருந்த பக்தர்களின் வசதிக்காக, ஆங்காங்கே வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், கோவிலுக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு, சிவபக்தர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் சார்பில், அன்னதானம், பால் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.திருவள்ளூர் எஸ்.பி., பொன்னி தலைமையில், 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆருத்ரா விழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் மற்றும் சித்துார் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஆருத்ரா அபிஷேகத்தில் கலந்துக் கொண்டு விடிய, விடிய அபிஷேகத்தை கண்டு வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar