பதிவு செய்த நாள்
24
டிச
2018
01:12
கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம் நடந்தது.கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று (டிசம்., 23ல்) காலை 5:00 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகருக்கு மகா அபிஷேகம் நடந்தது. 8:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகமும், 12:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு தீபாராதனையும் நடந்தது. நடராஜர், சிவகாமசுந்தரி ஆனந்த நடனமாடி கோபுர தரிசனம் நடந்து முடிந்து, ராஜ வீதியுலா நடந்தது.தொடர்ந்து, சிவகர தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி, ஊடல் உற்சவம், திருக்கல்யாணமும் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.