திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி அத்யயன உற்ஸவத்தை முன்னிட்டு நடந்த ராப்பத்து நாளையுடன் நிறைவடைகிறது.
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அத்யயன உற்ஸவம் கடந்த 8ல் பகல் பத்து உற்ஸவத்துடன் துவங்கியது. தினமும் காலை பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், ஆழ்வார்களுக்கு அருள்பாலித்தலுடன் பகல் பத்து உத்ஸவம் நிறைவடைந்து, டிச.,18 ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரவு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளினார்.தொடர்ந்து ராப்பத்து உற்ஸவம் துவங்கி தினசரி மாலை சொர்க்கவாசல் திறப்பும், நின்ற ராஜாங்க கோலத்தில் பெருமாள் எழுந்தருளலும் நடைபெற்று வருகிறது. நாளை காலை10:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் எழுந்தருளுவார். தொடர்ந்து உற்ஸவருக்கு அபிேஷக ,ஆராதனைகள், நம்மாழ்வார் திருவடி தொழுதல்,சரணாகதி அடைதல் உள்ளிட்ட நிகழ்வு நடைபெறும்.இரவில் மூலவர் சன்னதியில் எழுந்தருளலுடன் உற்ஸவம் நிறைவடையும்.