பதிவு செய்த நாள்
26
டிச
2018
12:12
நாகப்பட்டினம்: நாகை அடுத்த, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில் நடை பெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு திருப்பலியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கீழ்திசை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும் வேளாங்கண்ணி, ஆரோக்கியமாதா விண்மின் தேவாலயத்தில்,கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் (டிசம்., 24ல்) இரவு, 11:45 மணிக்கு துவங்கிய, சிறப்பு பாடல் திருப்பலி அதிகாலை, 1:30 மணி வரை நடந்தது.
இதில், 25 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலியில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு, நற்கருணை ஆசிர்,உலக அமைதிக்கான சிறப்பு ஜெபம் ஆகியவை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடந்தது.கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, புறநகரில் உள்ள தேவாலயங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
கருத்தம்பட்டியில் உள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயம், கோவையின் முதல் ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இது, 400 ஆண்டுகள் பழமை கொண்டது.இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன் தினம் (டிசம்., 24ல்) இரவு, 12:00 மணிக்கும், நேற்று (டிசம்., 25ல்) காலை, 8:30 மணிக்கும் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடந்தன.
இதில் கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து, 2,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுப் பிரார்த்தனை செய்தனர் அன்னூர் சத்தி ரோட்டிலுள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நேற்று (டிசம்., 24ல்) அதிகாலை 4:30 மணிக்கு, கிறிஸ்துமஸ் ஆராதனை நடந்தது.
காலை 9:30 மணிக்கு இரண்டாவது ஆராதனை நடந்தது. 1,000 பேர் ஆராதனையில் பங்கேற் றனர். விழாவில், 50 பேருக்கு கம்பளி மற்றும் புடவைகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.
சூலூர் சி.எஸ்.ஐ., சர்ச், கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை சர்ச், சோமனூர் புனித இஞ்ஞாசியார் ஆலையம் உள்ளிட்ட தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 24ல்) இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. உறவினர்கள், நண்பர்களுக்கு கிறிஸ்தவர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்தினர்.
தங்கள் வீடுகளை மின் விளக்குகளால் அலங்கரித்து, ஏசுபிரானின் பாடல்களை பாடி, விழாவை கோலாகலமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.
உடுமலை:உடுமலையில், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.உடுமலை அற்புத அன்னை ஆலயத்தில், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, சிறப்பு திருப்பலி நடந்தது. இயேசு அவதரித்தலை சித்தரிக்கும் வகையில், குடில் அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதே போல், சி.எஸ்.ஐ., இமானுவேல் ஆலயமும், கிறிஸ்துமஸ் விழாவுக்காக அலங்கரிக் கப்பட்டு, சிறப்பு திருப்பலியில், திரளானவர்கள் பங்கேற்றனர். இதே போல், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள, தேவாலயங்களிலும், சிறப்பு திருப்பலி நடந்தது. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அனைத்து தரப்பினரும் பரிமாறிக்கொண்டனர்.