பதிவு செய்த நாள்
26
டிச
2018
12:12
மார்கழி இசை விழா :மியூசிக் அகாடமியில், ஜெயந்தி குமரேஷின் வீணைக் கச்சேரி, எடுத்த எடுப்பிலேயே களை கட்டியது.
தத்வமறியதரமா என்ற சிவனின் பாடலும், ரீதிகௌளைக்கான ராக ஆலாபனையும், இவரது தரத்தன்மையை சுட்டிக் காட்டியது. தொடர்ந்தளித்த ராக ஆலாபனைகளின் வரிசையில், முதலில், மோஹனம், அடுத்து விவாதி மேளம், 61ஆக இருக்கும் காந்தாமணி, கடைசியில் ராகம் தானம் பல்லவிக்கான கரஹரப்ரியா ஆகியவை, ரசிகர்களை கவர்ந்தன.
மோஹனத்தில், நரஸிம்ஹ ஆகச்சஎன்ற தீட்சிதர் பாடலையும்., காந்தாமணிக்கு, தியாகராஜரின், ஏகைக க்ருதியான, பாலிந்துவோவும் வாசிக்கப்பட்டன.
சியாமா சாஸ்திரியின் தனியடையாளத்தைக் காட்டும் ஆஹிரி க்ருதி, மாயம்மா என்பதையும் கொடுத்தது, கச்சேரியை எல்லா வகையிலும் நிறைவு செய்தது. வீணை வாத்தியத்தின் வலக்கை பக்கத்தில், பிரிட்ஜின் அருகில் இடைவெளிகள் மிக நெருக்கமானவையாக இருக்கும்.
இவ்விடங்களிலும் அனாயாசமாக வாசித்ததுனா வீணைக்கென்றே பிறப்பெடுத்த, எஸ் பாலசந்தரை நினைவூட்டியது. அர்ஜுன் குமார் மிருதங்கத்திலும் திருச்சி கிருஷ்ணசுவாமி கடவாத்தியத்திலும், தனியாவர்த்தனத்துக்காக காத்திருக்காமல், வரக் கோர்வைகளின்
இடையிடையே, ஜெயந்தி கொடுத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். இது ரசிகர்களுக்கு, சிறப்பான அனுபவமாக இருந்தது.சன்னப்படுத்த முறையில் பிரகாசித்த
பிரசன்னாமயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், 67ம் ஆண்டு இசை விழாவை நடத்தி வருகிறது. இதில், பாடிய பிரசன்னா வெங்கட்ராமன், தியாகராஜரின் பாடல்களை பாடியது, ரசிகர்களை
கவர்ந்தது.
சுத்ததன்யாசி ராகத்தில், எந்த நேர்ச்சினா - செஞ்சுகாம்போதி ராகத்தில், வரராகலய - முகாரியில், காருபாரு ஆகிய தியாகராஜரின் பாடல்களை பாடினார்.சுத்ததன்யாசி மற்றும்
முகாரிக்கு, அவற்றின் ராக லட்சணங்களை, பிரசன்னா வெளிப்படுத்தியது. அவரது சாதுர்யத்தைக் காட்டியது.மேலும், தீட்சிதரின், கலாவதி கமலாசன யுவதி என்ற பாடலைப் பாடினார்.
தன் குரலை சன்னப்படுத்தும் முறை, பிரசன்னாவுக்கு கைவந்த கலையாக உள்ளது. தீவிர பயிற்சியின் மூலம், இந்த சன்னப்படுத்துதல் முறையை, அவர் சாதித்துள்ளார்.வயலினில்
ஸ்மிதா, மிருதங்கத்தில் மனோஜ் சிவா, கஞ்சிராவில் புருஷோத்தமன், ஆகயோர் தங்கள் பங்கை சிறப்பாக அளித்த, பிரசன்னாவின் கச்சேரிககு வலு சேர்த்தனர்.- எஸ் சிவகுமார்