பதிவு செய்த நாள்
27
டிச
2018
01:12
உடுமலை: உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
உடுமலை சுற்றுப்பகுதி மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.
நடப்பாண்டுக்கான திருவிழா வழிபாடுகள் குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்த்திருவிழா, ஏப்., 9ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. அன்று மாலை, 4:00 மணிக்கு பூச்சொரிதல், மாலை, 6:00 மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
தொடர்ந்து, ஏப்., 16ம்தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 19ம்தேதி கொடியேற்றத் துடன், மதியம், பூவோடு ஆரம்பமாகிறது. ஏப்., 23ம்தேதி பூவோடு நிறைவடைவதுடன், 24ம்தேதி மாவிளக்கு மற்றும் அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.
கோலாகலமான தேர்த்திருவிழா, ஏப்., 25ம் தேதி நடக்கிறது. ஊஞ்சல் உற்சவம், பரிவேட்டை மற்றும் வாணவேடிக்கை 26ம் தேதி நடக்கிறது. ஏப்., 27ம் தேதி கொடியிறக்கம், மகாபிஷேகம், மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.