திருப்போரூர் : திருப்போரூர் கந்தன் வழிபாட்டு பக்தர்கள், வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டனர்.திருப்போரூர் கந்தன் வழிப்பாட்டு மன்றத்தினர், ஆண்டுதோறும், பொங்கல் நாளன்று பால்குட ஊர்வலம் மேற்கொண்டு, கந்தனுக்கு அபிஷேகம் செய்துவருகின்றனர்.விரத நாட்களில், ஒரு நாள், வல்லக்கோட்டைக்கு பாத யாத்திரை சென்று, சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர்.அந்த வகையில், 28ம் ஆண்டு வல்லக்கோட்டை நடைபயணத்தை, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.