பதிவு செய்த நாள்
28
டிச
2018
02:12
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், கலைமகள் கிராமிய பம்பை இசைக் கலைஞர்கள் சார்பில், ஆருத்ரா பூஜை, பம்பைக்கு அபிஷேக பூஜைகள், மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநில இணை செயலாளர் மஞ்சுநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சரவணன் வரவேற்றார். ஆர்.டி.ஓ., சரவணன், மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கினார். காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து, 108 தீர்த்தக்குடம், பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, வினாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கம், நந்தி, பம்பைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.