பதிவு செய்த நாள்
31
டிச
2018
12:12
பல்லடம்: தெற்குபாளையம் மாரியம்மன் கோவில், பொங்கல் பூச்சாட்டு விழா, அம்மை அழைத்தல் நிகழ்ச்சியுடன், கோலாகலமாக துவங்கியது.பல்லடம் அடுத்ததெற்குபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நாரணாபுரம், தெற்குபாளையம், கல்லம்பாளையம், மாணிக்காபுரம், அம்மாபாளையம், ராசாக்கவுண்டம்பாளையம் மற்றும் ராயர்பாளையம் என, ஏழு கிராம மக்களின் குல தெய்வமாக விளக்கும் மாரியம்மனுக்கு, பொங்கல் பூச்சாட்டு விழா, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.நடப்பாண்டு விழா, நேற்று முன்தினம், அம்மை அழைத்தல், கம்பம் நடுதல் நிகழ்வுடன் துவங்கியது. குதிரை வாகனத்தில், அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஊர் மக்கள் அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.