பதிவு செய்த நாள்
31
டிச
2018
12:12
ஊத்துக்கோட்டை: அய்யப்பன் கோவிலில், இன்று காலை, மண்டல நிறைவு விழா மற்றும் 108 சங்காபிஷேக விழா நடைபெற உள்ளது.பெரியபாளையம் அடுத்த, ஆரணி பிஞ்சலார் தெருவில் உள்ளது, அய்யப்பன் கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவிலில், கும்பாபிஷேகம் முடிந்து, 48 நாட்கள் நடந்த மண்டல பூஜை, இன்றுடன் நிறைவடைகிறது.நேற்று காலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜை, அனுஞ்சை, சங்கல்பம், சங்கு ஸ்தாபனம், விசேஷ ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.இன்று காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால சங்கு பூஜை, விசேஷ ஹோமம், மகா பூர்ணா ஹூதி நடைபெறும். காலை, 7:00 மணிக்கு, மண்டல பூஜை நிறைவு விழா மற்றும் 108 சங்கு அபிஷேகம் நடைபெறும்.மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். நள்ளிரவு, 12:00 மணிக்கு, சிறப்பு ஆரத்தி நடைபெறும்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.