பதிவு செய்த நாள்
02
ஜன
2019
02:01
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே தத்வமஸி சபரி யாத்திரை குழு சார்பில், அன்னதான நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனி அன்பழகன் வீதி தத்வமஸி சபரி யாத்திரை குழு சார்பில், 11ம் ஆண்டு அன்னதான நிகழ்ச்சி
நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 31ல்) ஐயப்ப சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. சிங்காரி மேளத்துடன், சுவாமி ஊர்வலம், வாண வேடிக்கையுடன், கோவை ரோடு, தேர்நிலையம், சத்திரம் வீதி, மாரியம்மன் கோவில் வழியாக வந்து, அழகப்பா காலனி அன்பழகன் வீதி கருப்பராயன் கோவில் அருகில் உள்ள அலங்கார பந்தலுக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து, நேற்று (ஜன.,1ல்) காலை, 7:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு கணபதி ஹோமம், அலங்கார பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, இரவு குழந்தைகள் நடன நிகழ்ச்சியும் நடந்தது.