மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை தேரடி வீதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் 16ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது.இதையொட்டி, நேற்று (ஜன.,2ல்) காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை, 2:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.