பதிவு செய்த நாள்
04
ஜன
2019
01:01
எடையார்பாக்கம்: பழமை வாய்ந்த எடையார்பாக்கம் மகாதேவர் கோவிலை பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், எடையார்பாக்கம் கிராமத்தில், பழமை வாய்ந்த மகாதேவர் கோவில் உள்ளது.கி.பி., 11ம் நுாற்றாண்டில், முதலாம் குலோத்துங்கன் காலத்தில், துாங்காணை மாட வடிவில், இக்கோவில் கட்டப்பட்டது, கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்தது.
இந்நிலையில், பராமரிப்பின்றி காணப்படும் இக்கோவில் கோபுரத்தின் மீது, 10க்கும் மேற்பட்ட அரச மரக்கன்றுகள் வளர்கின்றன.இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:இக்கோவில், சிறியதாக இருந்தாலும், தமிழகத்தின் கட்டடக் கலையை பறைசாற்றும் வகையில் உள்ளது. பூஜை செய்ய குருக்கள் இல்லை.அதே பகுதியைச் சேர்ந்த, கால்நடை விவசாயியான முதியவர், தினமும் பூஜை செய்து, கோவிலை பராமரிக்கிறார்.ஹிந்து அறநிலையத் துறை அல்லது தொல்லியல் துறையினரிடம் இருந்து, இந்த கோவிலுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இன்றி இருப்பதால், மர்ம நபர்கள் கோவிலில் உள்ள பூஜை பாத்திரங்களை அடிக்கடி திருடி செல்கின்றனர்; கோவிலையும் சேதப்படுத்துகின்றனர்.கோவிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.