உளுந்துார்பேட்டை: உளுந்தார்பேட்டை அடுத்த பு.கொணலவாடி கிராமத்தில் சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீசாரதா ஆசிரமம் சார்பில், உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு விளக்கு பூஜை வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு நடந்த இந்த பூஜையினை ஆசிரம சகோதரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.