திருப்பரங்குன்றம் திருக்குளத்தில் ஒளிரும் ஓம் முருகா நவீன மின்விளக்குகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2026 01:01
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான லட்சுமி தீர்த்த குளத்தின் கிழக்கு பகுதியில் ஓம்முருகா என்ற எழுத்துக்களுடன் நவீன போர்டு நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. அக்குளம் கோயில் சார்பில் ரூ. 6.50 கோடியில் பழமை மாறாமல், ஏற்கனவே இருந்த கருங்கற்கள் கொண்டு சீரமைப்பு பணிகளும், வடக்கு பகுதிகளில் சிமென்ட் கான்கிரீட் சுவர் அமைத்து அதன் உள்பகுதியில் கருங்கல்கள் பதித்து சீரமைக்கப்பட்டது. முன்பு குளத்தின் மையப் பகுதியில் இருந்த மின் விளக்கு கம்பம் அகற்றப்பட்டு, லட்சுமி தீர்த்த குளத்தின் பெயருக்கு ஏற்றார் போல் மையப் பகுதியில் கருங்கல் பீடம் அமைக்கப்பட்டு அமர்ந்த நிலையில் லட்சுமியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் திருக்குளத்தின் கிழக்குப் பகுதியில் ஓம் முருகா என்ற எழுத்துக்களுடன் நவீன டிஜிட்டல் போர்டு உபயோகாரர் மூலம் அமைக்கும் பணி துவங்கியது. நேற்று அப்பணி நிறைவடைந்து மின் விளக்குகள் ஒளிர்கிறது. இந்த ஓம் முருகா போர்டு வெளிச்சம் குளத்தின் தண்ணீரில் படர்ந்திருப்பது பக்தர்களின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.