பையூரில் 12 அடி உயரமுள்ள தட்சணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2026 01:01
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் புத்தாண்டைய யொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பையூரில் உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி கோவிலில் 12 அடி உயர குரு பகவான் சிலை அமைந்துள்ளது. இக்கோவிலில் புத்தாண்டையொட்டி நேற்று காலை 7:00 மணியளவில் தட்சணாமூர்த்தி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர் வாசனை திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் , தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து 12 அடி உயரமுள்ள தட்சணாமூர்த்தி சுவாமி பக்தர்களுக்கு விபூதி அலங்காரத்தில் அருள் பாலித்தார். திருவெண்ணெய்நல்லூர், பையூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.