பதிவு செய்த நாள்
04
ஜன
2019
01:01
திருப்போரூர்: புதுப்பாக்கம் திருமலை வீர ஆஞ்சநேயர் கோவிலில், நாளை, அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.கேளம்பாக்கம் - - வண்டலுார் சாலையில், பிரசித்தி பெற்ற புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இந்தாண்டு அனுமன் ஜெயந்தி வைபவம், நாளை நடைபெறுகிறது.விழாவை ஒட்டி, அதிகாலை படிபூஜையும், காலை, 6:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. பின், வெள்ளிக் கலசத்தில், சுவாமி அருள்பாலிக்கிறார். காலை, 9:00 மணி முதல் லட்சார்ச்சனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவை ஒட்டி, புதுப்பாக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இதே போல், திருப்போரூர் அடுத்த செங்காடு கிராம ஆஞ்சநேயர் கோவிலில், நாளை, ஏக தினவிழா நடைபெறுகிறது.