குளித்தலை: கடம்பர்கோவில், கடம்பவனேஸ்வரர் கோவிலில், முகூர்த்தக்கால் நட்டு, தைப்பூசம் திருவிழா துவங்கியது. குளித்தலை கடம்பர்கோவிலில் உள்ள, கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூசம் திருவிழா, வரும், 21ல் நடக்கிறது. இத்திருவிழாவையொட்டி நேற்று காலை, முகூர்த்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில் இ.ஓ., வேல்முருகன், சிவாச்சாரியார்கள், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.