பதிவு செய்த நாள்
07
ஜன
2019
11:01
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் அரிதான பாண லிங்கம் உள்ளது. உத்தரகோசமங்ககை மூலவர் மங்களநாதர் சுவாமி கருவறை சன்னதிக்கு அருகே வலது புறத்தில் காண்பதற்கு அரியதாக காணப்படும் பாணலிங்கம் உள்ளது. சிவலிங்கத்தின் மேற்பகுதி உருண்டை வடிவில் காணப்படுகிறது. எம்.விஜயமுருகன் 28,கோயில் ஓதுவார் கூறியதாவது: இங்குள்ள ஸ்தல விருட்ஷமாக உள்ள இலந்தை மரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். தாழம்பூ சிவன்கோயிலில் சாத்தப்படுவது இல்லை. தாழம்பூவிற்கும், பிரம்மதேவனுக்கும் சாபவிமோசனம் அளித்ததால், இங்கு சிவனுக்கு தாழம்பூ சூட்டப்படுகிறது. மிகப்பழமையான லிங்கமாக பாண லிங்கம் அமைந்துள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கற்சங்கிலி, சிங்கத்தின் வாயில் கற்குண்டு, ஒரு ரூபாய் அளவிலான யானைச் சிற்பம், பச்சை மரகத நடராஜர், ஆயிரம் லிங்கம் கொண்டசகஸ்ரம், வியாச பகவானின் பாதுகை, ஏகபாத உருத்திரர், உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான சிற்பங்களை உள்ளது, என்றார்.