செஞ்சி: செஞ்சி அடுத்த மேல்சித்தாமூர் கிராமத்தில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட தூய லூர்து அன்னை ஆலய திறப்பு விழா நேற்று முன்தினம் (ஜன.,5ல்) நடந்தது.பங்கு பணியாளர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார்.
மறை மாவட்ட ஆயர்கள் செங்கல்பட்டு நீதிநாதன், வேலூர் சவுந்தர்ராஜூ, ஆந்திர மாநிலம் ஏலுரு ஜெயராவ் பொலிமெரா, கடப்பா கல்லல்ல பிரசாநத், அடிலாபாத் அந்தோணி பிரின்ஸ், சபைத் தலைவர் மைக்கேல் இக்னேஷியஸ், அருட்சகோதரர் சாந்தப்பன் ஜான்பீட்டர் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தி தேவாலயத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து கூட்டு பிரர்த்தனை மற்றும் ஜபம் நடந்தது. இதில் மேல்சித்தாமூர் கிறிஸ்துவ சமூக தலைவர் மகிமைதாஸ் மற்றும் குளூனி அருட் சகோதரிகள், சமூகத்தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.