பதிவு செய்த நாள்
07
ஜன
2019
02:01
மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சிறுமுகையை அடுத்த இடுகம்பாளையத்தில் மிகவும் பழமையான அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5:30 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. கார மடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர் சுவாமிகள் தலைமை யில், கோவிலில் மகா சுதர்சன ஹோமமும், 108 கலச திருமஞ்சனமும், லட்சார்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.தமிழ்மாத முதல் சனிக்கிழமை விழாக்குழுவினர் சார்பில் கோவிலில் காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.போலீசார், நஞ்சையா லிங்கம்மாள், ஜி.ஆர்.ஜி., ஆகிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
* சூலூர் அடுத்த கரவளி மாதப்பூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பழமையானது. இங்கு, ஹனுமன் ஜெயந்தி விழா மற்றும் இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து, அபிேஷக, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஆஞ்சநேய சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.