பதிவு செய்த நாள்
07
ஜன
2019
02:01
மணலிபுதுநகர்:அற்புத குழந்தை இயேசு ஆலய தேர் பவனியில், 1,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மணலிபுதுநகர், அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில், 39ம் ஆண்டு பெருவிழா, 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான, குழந்தை இயேசு தேர் பவனியை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜன.,5ல்) இரவு, சென்னை - மயிலை மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா, சிறப்பு திருப்பலி நடத்தினார்.அதை தொடர்ந்து, குழந்தை இயேசுவை தாங்கிய மாதா அலங்கரிக்கப்பட்ட தேர்களில், கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். பேண்ட் வாத்தியங்கள் முழங்க, 1,000த்திற்கும் மேற்பட்டோர், ஊர்வலத்தில் பங்கேற்றனர்.நேற்று (ஜன.,6ல்) இரவு, கொடியிறக்கத்துடன், ஆண்டு பெருவிழா நிறைவுற்றது.