காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் குப்பங்குழி வீற்றிருந்த பெருமாள் கோவிலில் திருப்பாவை விரிவுரை நடந்து வருகிறது.இக்கோவிலில் ஆண்டு தேறும் மார்கழி மாதத்தில் ஆண்டாள் திருப்பாவை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருப்பாவை விரிவுரை மார்கழி 1ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடந்தது. தினமும் மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை தோத்தாத்ரி திருப்பாவை விளக்கவுரையாற்றினார். ஏராளமான பக்தர்கள் திருப்பாவை விரிவுரையை கேட்டறிந்தனர்.