பொங்கலுார்: பொங்கலுார் அலகுமலையிலுள்ள வலுப்பூரம்மன் கோவிலில், தேர்த்திருவிழா நாளை துவங்குகிறது. 14ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. நாளை இரவு விக்னேஷ்வர பூஜையுடன் திருவிழா துவங்குகிறது. 12ல், காப்பு கட்டுதல், கொடியேற்றம், மகா அபிேஷகம், தீபாராதனை, ரத வீதிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 14ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.