பழநி,:பழநி தைப்பூச விழா நாளை (ஜன.15ல்) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இத்திருவிழா ஜன.24 வரை நடக்கிறது. இதையொட்டி வெளிமாவட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக காவடிகள்,அலகு குத்தி வந்த வண்ணம் உள்ளனர். கேரள பக்தர்கள் இசை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். நாளை பழநி கிழக்குரதவீதி பெரியநாயகியம்மன் கோயிலில் காலை 10:30 மணிக்கு கொடியேற்றமும், மலைக் கோயிலில் உச்சிக்காலத்தில் காப்பு கட்டுதலும் நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியாக ஜன.20 ந்தேதி இரவு திருக்கல்யாணமும், ஜன.21ந் தேதி மாலை 4:30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.